உங்கள் உள்ளூர் கஃபேயில் இலவச Wi-Fi பயன்படுத்துவதுபோல, தெரியாத அல்லது நம்பிக்கையில்லாத நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் செல்லும்போதெல்லாம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தனது நெட்வொர்க்கில் உள்ள டிராஃபிக் எல்லாவற்றையும் சேவை வழங்குநர் கண்காணிக்கலாம், இதில் உங்கள் தனிபட்ட தகவலும் இருக்கக்கூடும்.
எனினும், இணையச் சேவையுடன் உங்கள் இணைப்பைக் குறியாக்கும் சேவையை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் செயல்பாட்டை உளவு பார்க்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் கடினமாக மாறும். இயல்பாகவே, உங்கள் கணினி மற்றும் Google க்கு இடையேயான Gmail இணைப்பைக் குறியாக்குவோம் – இது உங்கள் Google செயல்பாட்டை, பிறர் உளவு பார்ப்பதிலிருந்து பாதுகாக்க உதவும். நீங்கள் Google இயக்ககம் மற்றும் பிற சேவைகளில் உள்நுழையும்போது இயல்பாகவே அமர்வு அளவிலான SSL குறியாக்கம் என்று அறியப்படும் பாதுகாப்பையும் உருவாக்குகிறோம்.
நீங்கள் இணையத்தில் உலாவும்போது இணையதளத்துடனான உங்கள் இணைப்புப் பற்றிய சிக்னல்களைப் பார்க்கவும்.
URL உண்மையானதா என்பதைப் பார்க்க முதலில் உங்கள் உலாவியின் முகவரிப் பட்டியை பார்க்கவும். உங்கள் இணையதளத்துடனான இணைப்பு குறியாக்கப்பட்டதையும் உளவு பார்க்கப்பாடுவதை அல்லது அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்படுவதைத் தடுக்கும் என்பதைக் குறிக்கும் https:// உடன் இணைய முகவரி தொடங்குவதைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் இணைப்பு குறியாக்கப்பட்டதையும் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இணைந்துள்ளதையும் தெளிவாகக் குறிப்பிட சில உலாவிகளின் முகவரிப் பட்டியில் https:// அருகில் பேட்லாக் ஐகான் இருக்கும்.
பொது Wi-Fi நெட்வொர்க் வழியாக நீங்கள் இணையும்போது, உங்கள் இணைப்பு குறியாக்கப்படவில்லை எனில் உங்கள் கணினி மற்றும் Wi-Fi ஹாட்ஸ்பாட்டுக்கு இடையே செல்லும் தகவலை சுற்றியிருப்பவர் எவரேனும் கண்காணிக்கலாம். பொது நெட்வொர்க்குகளில் வங்கியிடல் அல்லது ஷாப்பிங் போன்ற முக்கியச் செயல்பாடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
வீட்டில் Wi-Fi பயன்படுத்தினால், உங்கள் திசைவியைப் பாதுகாக்கக் கடவுச்சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகள் அறிந்திருக்கக்கூடிய திசைவிக்கான இயல்பு கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக திசைவிக்கு உங்கள் சொந்தமான கடவுச்சொல்லை அமைக்க உங்கள் இணைய சேவை வழங்குநர் அல்லது திசைவி தயாரிப்பாளர் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் திசைவியானது குற்றவாளிகள் அணுகும்படியாக இருந்தால், அவர்கள் உங்கள் அமைப்புகளை மாற்றலாம் மேலும் ஆங்கள் ஆன்லைன் செயல்பாட்டை உளவு பார்க்கலாம்.
இறுதியாக, கூடுதல் பாதுகாப்பிற்காக மற்றவர்கள் இதைப் பயன்படுத்தாமல் இருக்க உங்கள் முகப்பு Wi-Fi நெட்வொர்க் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது உங்கள் Wi-Fi நெட்வொர்க்கைப் பாதுகாக்க கடவுச்சொல் அமைப்பது – உங்கள் கடவுச்சொல்லை மற்றவர் யாரும் எளிதில் கணிக்க முடியாத வகையில் நீங்கள் தேர்வுசெய்யும் கடவுச்சொற்கள், நீளமானதாகவும், எண்கள், எழுத்துகள் மற்றும் குறிகள் ஆகியவற்றின் தனிப்பட்ட கலவையாக இருப்பதை உறுதிசெய்யவும். மேலும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக உங்கள் நெட்வொர்க்கை உள்ளமைக்கும்போது WPA2 அமைப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.